கான்ட்ராக்டர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாதகமானது தான் நதிநீர் இணைப்பு திட்டம் :சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன்
பியர்சன் லினேக்கர் ச.ரே
நிதி நீர் இணைப்பை பற்றி அரசு கூறும் விளக்கம் என்பது, உபரி நீர் அதிகமாக இருக்கும் ஒரு நிதியை, நீர் வரத்து மிக சொர்ப்பமாக இருக்கும் ஒரு நதியுடன் இணைத்தல் மூலம் வறண்ட பகுதிக்கு நீர் வரத்து கடைக்கும். கிடைக்கப்பெறும் நீரை அணையில் தேக்குவதன் மூலம் தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் என்கிறது.இந்தியா முழுவதும் இருக்கும் 60க்கும் மேற்பட்ட நதிகளை இனைப்பதன் மூலம் 87மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கடைக்கும்,விவசாயிகள் தனி நபர் வருமானம் பெருகும்,அணைகள் மூலம் மின்சாரம் எடுக்கபடும் என்று இந்திய அரசு சொல்கிறது.
மேலும் மாநில அரசுகளும் நதி நீர் இணைப்பை அவர்கள் பகுதிக்கு ஏற்றவாறு புரிந்து கொள்இருக்கிறது.
பெரிய திட்டங்கள் எனும் மாயையை நாம் யோசிப்பது மூலமாக, சிறிய தீர்வுகளை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் பெரிது படுத்துகிறோமா?
நீர்,நீர் மேலாண்மை,தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி போன்ற விஷயத்திற்கு அரசு முதல் சாமியார் வரை முன்வைக்கும் தீர்வாக பெரிய அணையாக, நதி நீர் இணைப்பாக இருந்து வருகிறது.
உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா?பயன் தருமா? அதனால் பயன் யாருக்கு என்ற பல கேள்விகள் நம் முன்னே இருக்கிறது
நிதி நீர் இணைப்பு தொடர்பாக சூழலியல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனிடன் பேசிய போது அவர் கூறியதாவது:
நீதிநீர் இணைப்பு என்பது கான்ட்ராக்டர்கள் பயன்பெறுவதற்கான திடடம் என்று கூரும் அவர் அந்த திட்டத்தை பற்றி சற்று விரிவாகவே விளக்குகிறார்
கோதாவரி ,கிருஷ்ணா நதிகளில் உபரி நீர் அதிகமாக இருக்கிறது என்றால் நீரானது கோதாவரியிலிருந்து காவேரி வந்தடைய கோதாவரி,கிருஷ்ணா மற்றும் காவேரி ஆறுகளின் மேடான பகுதிகளிலிருந்து தாண்டி வர வேண்டும் .அதற்கு அதி நவீன ,உயர் தொழில்நுட்ப கட்டுமான முறைகளை பின்பற்ற வேண்டும் .இந்த பணிக்கான செலவு மிக அதிகம் ஆகும் மேலும் அதனால் சுற்றுசூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் .இந்த முறைகளை பின்பற்றினாலும் தண்ணீர் வந்தடையும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை .அப்படியே சரியாக செயல்பட வேண்டும் என்றால் உபரி நீர் இருப்பை பற்றிய உண்மையான தகவல்கள் கட்டாயம் தேவைப்படும் .மேலும் அவை உபரி நீர் அளவு பற்றிய சமீபத்திய தகவல்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் .அதில் நாம் சொல்ல விரும்பும் கதைளை எல்லாம் சேர்த்து சொன்னால் நர்மதா அணை திட்டம் போல் மாறிவிடம் .ஒரு ஆற்றில் இவ்வளவு தண்ணீர் ஓடும் .அதைத்தடுத்து அணைக்கட்டினால் இவ்வளவு தண்ணீர் நிற்கும் என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வேண்டும் .நீர் நிலைகளை பற்றிய உண்மையான தகவல்கள் கொண்ட ஆவணங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தது .ஆனால், தற்போது ஆவணம் என்ற ஒன்றே இல்லை. அப்படியே இருந்தாலும் பொய்யானதாகவும் ,பழைய தகவல்களை உள்ளடக்கிய ஒன்றாகவே உள்ளது.காவேரி தீர்பாயத்தில் கூட நாற்பது வருடத்திற்கு முந்தைய தகவல்களை வைத்து தான் ஓட்டிக்கொண்டிருக்கிறோம் .அதற்கிடையில் பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது .1970 களில் காடுகளினால் நிறைய அளவிலான நீர் உற்பத்தி நடந்தது .அன்றைய காலத்தின் நீர் அளவு வேறு ,அதை வைத்து இப்போது கணக்கு போடுவது தவறு . மலை இருக்கும் நேரத்தில் நீர் வரத்து அதிகம் இருக்கும் ,மலை இல்லாத காலங்களிலும் காடுகளின் உதவியால் நீர் வரத்து இருக்கும் .தற்போது வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் குறிப்பாக குடகு பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டது .அப்படியிருக்க வருடம் முழுவதும் நிலையான தண்ணீர் எங்கிருந்து வரும் ?வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்காது என்றால் இந்த திட்டத்தின் அடிப்படையே தவறு ,தவறான தகவல்களின் அடிப்படையில் போடப்பட்டிருக்கும் திட்டம் மக்களுக்கு பாதகமானது ,இதனால் கோடிக்கணக்கில் பயன்பெறவிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு சாதகமானது. உபரி நீர் அதிகம் இருக்கும் இடத்திலிருந்து நீரை எடுக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் .தமிழ்நாட்டிலயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீர் சென்றுவிட்டால் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது .சென்னைக்கு திருவள்ளூரிலிருந்து தண்ணீர் எடுக்கிறோம் அங்கு இருக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தடி நீர் பறிபோகிறது என்று போராடும் போது அவர்களை வழுக்கட்டாயாமாக கைது செய்தோம் .வருங்காலங்கலளில் ஒருவேளை கோதாவரி ஆற்றின் நீரை தரமாட்டோம் என்று அம்மக்கள் போராடினால் நாம் இங்கு பேருந்துகளை கொளுத்தபோகிறோமா ?. என்ற கேள்வியை எழுப்பினார்
Comments
Post a Comment