மனைவி ரஜினியுடன் நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து


- சுப்ரமணி.

சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' திரைப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஒருவருட காலமாக மனைவி ரஜினியுடன் பிரிந்து இருந்த நிலையில், இன்று சட்டப் பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு 2011ம் ஆண்டு டிசம்பர் 2 திருமணம் நடைபெற்று, ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

விவாகரத்து குறித்து தனது டிவிட்டர் வலைதளத்தில், “நானும் ரஜினியும் ஒரு வருட காலமாக பிரிந்து இருந்த நிலையில் இப்போது விவாகரத்து நடந்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறான். எங்கள் மகனுக்கு பிரிந்து வாழ்ந்த நிலையிலும் ஒரு நல்ல பெற்றோராக இருந்து அவனுக்கு தேவையான நல்லது அனைத்தையும் செய்வோம்.பல வருடங்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் கடந்துள்ளோம். இனி ஒரு நல்ல மரியாதைக்குரிய நண்பர்களாக இருப்போம்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இவர் 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுபட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

Comments