பியர்சன் லினேக்கர் .ச.ரே.
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகள் முடிந்து விட்டது. இனி ஓட்டு போடுவது தான் மிச்சம் . சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜிவ் காந்தி மருத்துவமனை வரும் சில மக்களிடம் பேசினோம் .மக்கள் தேர்தல் பிரச்சாரங்களை தொலைக்காட்சியிலோ, தங்கள் தெருக்களிலோ பார்த்திருப்பார்கள், இவற்றிலிருந்து தாங்கள் புரிந்து கொண்டது என்ன, அவரவர் துறை சார்ந்த விஷயங்களை அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்களா, பணப்பட்டுவாடா எப்படி பார்க்கிறார்கள் என சில கேள்விகளை அவர்களிடம் கேட்ட போது மிக நிதானமாகவும், மேலோட்டமாகவும்,ஆழமாகவும் தங்கள் துறை சார்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் பெயர் குறிப்பிடவிரும்பாத மருத்துவர் நமக்குமிடம் பேசுகையில்;
இந்த தேர்தல் பிரச்சாரம்லாம் சும்மா படம் காட்டுறது, தொண்டர்களை உற்சாகப படுத்த பேசுறது என்று ஆரம்பித்த அவர் .நான் லண்டனில் படித்திருந்தாலும் நம் நாட்டு ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்கு தான் அரசு மருத்துவமனைக்கு வேளைக்கு வந்தேன். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது தான் சிறந்த தொண்டு என்று நம்புகிறேன். ஆனால் முன்பு போல் மருத்துவத்துறை இன்று இல்லை. அரசு மருத்துவமனையே லாபம் ஈட்டும் ஒரு துறையாக மாறிவிட்டது. அன்று சோசலிச கொள்கைகளை பின்பற்றிய போது அரசுத்துறைகளில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஓரளவிற்கு நியாமான சம்பளமும், ஓய்வு பெற்றால் மாதம் பென்ஷனும் கிடைக்கும். இக்கொள்கையானது அனைவருக்கும் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கையையும் தங்கள் வேளைகளில் ஈடுபாடுடன் செயல்பட ஊக்கமும் தந்தது. ஆனால் இன்றைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அரசு மருத்துவமணையில் துப்பரவு மற்றும் இதர உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் அனைத்தையும் அவுட் சோர்சிங் செய்துவிட்டார்கள்.
ஒரு நபர், பல வேலைகளை சொர்ப்ப சம்பளத்தில் செய்ய வேண்டும், எப்படி அவர்கள் ஆர்வத்துடன் வேலை செய்வார்கள் பற்றே இல்லாமல் செய்யும் சூழலில் தான் இருக்கிறார்கள் அப்படி செய்யவில்லை என்றால் பேச்சிற்கே இடமில்லாமல் வேளையில் இருந்து தூக்கிவிடுவார்கள். முன்பு அரசு கொடுத்த பாதி சம்பளம் கூட இப்போது தருவதில்லை. அரசு ஊழியர்களாக இவர்கள் இருந்த போது தெயிரியமாக கடன் வாங்குவார்கள், தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பார்கள், திருமணம் செய்துவைப்பார்கள். ஆனால் இன்றோ அரசு முற்றிலும் இவர்களை கை கழிவிட்டது . உடல் நலமற்றவர்களுக்கு யாரும் செய்ய தயங்கும் மனித சேவையை செய்யும் இவர்களை தனியார் கம்பெனிகள் மூலம் நிர்வகிக்க அரசு வழி செய்துவிட்டது. லாபம் ஈட்டிட துடிக்கும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு எதிரானவை. மருத்துவ அதிகாரிகளே இந்த நிறுவனங்களை கேள்வி கேட்க முடியாது, வேலை செய்யுங்கள் என்று வலியுறுத்த முடியுமே தவிர அதிகாரம் செய்ய முடியாது.தமிழ்நாடு முழுவதும் இந்த கான்ட்ராக்ட்டுகளை எடுத்திருப்பது முன்னாள் முதல்வரின் தோழி தான் இதை எல்லாம் தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்களுக்கு கமிஷன் வந்தால் போதும் என்று கூட்டு கொல்லை அடிக்கிறார்கள்.போதுமான மருத்துவர்கள் நியமனம் செய்யவில்லை ,தேவையான வேளை ஆடைகள் இல்லை .போக போக இடம் மட்டும் தான் அரசு இடமாக இருக்கும் மருத்துவர்களும், நிர்வாகமும் தனியாரிடம் செல்வதற்கு நிறைய நாட்கள் இல்லை . இந்த சூழ்நிலைகளை பற்றி எல்லாம் ஆண்ட அரசியல் கட்சிகள் பேசவே மாட்டார்கள், இனிமேலும் நாம் தனிநபர்களின் முகங்களை பார்த்து, பேச்சாற்றல்களை பார்த்து ஓட்டு போட்டால் சூழல் மிக மோசமானதாக இருக்கும், பொது துறைகளை பலப்படுத்துவது மிக முக்கியம் .அதை மக்கள் தான் செய்ய வேண்டும் .

நான் சொல்லப்போற விசயத்த யாருமே பேசுலங்க என்று பேச ஆரம்பித்தார் தனியார் துறையில் வேலை பார்க்கும் நரேஷ் :
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு முதலில் வேலை கொடுங்க ஹிந்தி காரவங்க கம்மியா சம்பளம் வாங்குறதுக்காக நாங்க பாதிக்க படுணுமா. பில்டிங் கட்டிட வேலைல இருந்து அரசு வேலை வரைக்கும் அவங்க தான் இருக்குக்காங்க. எல்லாம் மாநில உரிமையும் போது உள்ளூர்காரன மதிக்காம வெளியூர் காரனுக்கு வேலை கொடுத்த யாருக்கு தான் அவங்க மேல வெறுப்பு வராது. தமிழ்நாட்டுல தமிழனுக்கு தான் வேலை முக்கியம் கொடுக்கணும்னு கோவமா பேசி வேக வேகமாக சென்றார் நரேஷ்.
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் சிவானந்தம் மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் நடந்த உரையாடலின்தொகுப்பு :
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு,கல்வி கடன் ரத்து, விவசாயிகளுக்கு நிறைய ஊக்கத் தொகை, பெண்கள் சுயமாகத் தொழில் செய்ய உதவிகள், சிறு தொழில் செய்ய பணம் ஆகியவற்றை கொடுத்து உதவ வேண்டும் .மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்றால் அரசு பள்ளிகள் , மருத்துவமனைகள் ஆகுவற்றை திறக்க வேண்டும் .
மருத்துவமனை சார்ந்து சற்று ஆழமாக பேசினார்கள் :
அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் என்னை போன்றவர்களுக்கு எட்டு ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் அளிக்கவில்லை , ஆண்கள் மற்றும் பெண்கள் உதவி செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது, தீயேட்டர்,பம்ப் ,அனஸ்தீஸித்தியா டெக்சனிஷியன்கள் மட்டும் வேளைக்கு எடுத்துளார்கள் மற்றபடி மருத்துவமனையில் இருக்கும் எந்த பிரிவிக்கும் ஆட்களை நியமனம் செய்யவில்லை .ஒரு வார்டில் ஒரே ஆள் நான்கு பேருடைய வேலையை செய்ய வேண்டியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் ஒருவரின் மீதே வேலை பழு அதிகமாகிறது ஒருவர் எந்த வேலை செய்ய தகுதியாக இருக்கிறோரோ அந்த வேலை மட்டுமே செய்ய வேண்டும். எல்லாத்துறை வேலைகளையும் மாற்றி மாற்றி செய்வது ஆபத்தான ஒன்று. அரசு வேளைக்கு பதிவிட்டு நிறைய நாட்கள் காத்திருப்தால் வயது மூப்பு ஏற்பட்டுவிடுகிறது.
தொகுப்பூதியத்தில் நான்கு ஆண்டுகள் வேலை பார்ப்பவர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்கவேண்டும் . இது தொடர்பாக எத்தனை முறை அதிகாரிகளிடம் கேட்டும் ஒழுங்கான பதில் வரவில்லை. நிரந்தரமான பணி கேட்டால் அப்படியே புதிய ஆட்களை தேர்வு செய்து விடுகிறார்கள் இதனால் முன்பு வேலை பார்த்தவர்களுக்கு வேலை இல்லாத நிலையம் ஏற்படுகிறது. ரிட்டயர்டு ஆகி சென்றவர்களை இன்சூரன்ஸ் கொடுத்து பணியில் வைத்து கொள்கிறார்கள் காரணம் புதிதாக ஒருவரை தேர்வு செய்து ஆருக்கு பயிற்சி அளிக்க செலவு செய்ய முடியாது என்கிறார்கள், இதனால் புதிதாக வேலைக்கு வர விரும்புவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாதம் 7500 சம்பத்தை வைத்து என்ன செய்வது சொல்லுங்கள். நாங்கள் செய்யும் வேலை மிக உன்னதமானது, அடிபட்டு வரும் நோயாளிகளை ரத்தம் வடிந்தால், புளுக் கொட்டினால் கூச்சம் பார்க்காமல் எங்கள் கைகலாலேயே தூக்கி செல்வோம் .காசு தான் முக்கியம் என்றால் அரசு மருத்துவமனையில் நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் நல்ல சம்பளத்துடம் பிரைவேட் ஆஸ்பிட்டலகுக்கே போயிருவோம். ஆனா, இங்க எல்லாம் காசு இல்லாத ஜனங்க தான் வருவாங்க நாங்க அவங்களுக்கு தான் சேவை செய்ய விரும்புகிறோம் . அரசு எங்களுக்கு படிப்பு ,சாப்பாடு கொடுத்துச்சு அதுதான் எங்களுக்கு நிரந்தர வேலையும் கொடுக்கணும்.
ஆர்மி மேன் ஒருவர் பேசுகையில்:
இந்த தடவ எங்க ஓட்டு திமுக காங்கிரசுக்கு தான்.நான் இந்தியன் ஆர்மில வேலை பாக்குற ஆளு. மோடி வந்ததுல இருந்து அவரு ஏதாவது பண்ணி நம்பள காலி பண்ணிருவாருனு நிறைய பேருக்கு பயம் . அங்க நடக்குறது எல்லாத்தையும் பார்த்து வெருத்துட்டேன். வெட்கமே இல்லாம அவரு சௌகிதாருனு அவர அவரே சொலிக்கிறாரு இதனால் தான் அவரு மேல இருந்த மரியாதைலாம் போயிருச்சு. தமிழ்நாட்டுல இருக்க சூழலே வேறன்னு இங்க வந்து பாத்து தெரிஞ்சிகிட்டேன்.
திமுக காசுக்கு பணம் கொடுக்குறாங்கனு நிறைய பத்திரிகைலாம் வந்துருக்கே என்று கேட்டதற்கு .
யாரு வேனா யாருக்கு வேனாழும் கொடுக்கட்டும் .நான் வாங்க மாட்டேன் ஆனா வாங்குறவங்கள திட்ட மாட்டேன்.எங்க வீட்ல எங்க அம்மா வாங்குனாலும் ஒன்னும் சொல்ல மாட்டேன்
மநீம , நாம் தமிழர் கட்சி ஆகியோரை மாற்றாக நினைக்கவில்லையா என்று கேட்டதற்கு
கமல், ராகுல் காந்திய ஏன் போய் பார்த்தாரு ?அப்ப தெரியாத அவரு ஊழல்வாதின்னு. அவரு ஏன் ஸ்டாலின் நடத்துன கூட்டத்துக்காலம் வந்தாரு ? இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்குங்க . அன்புமணி நல்ல பேசுனாரு சரி நல்லவரா இருப்பாரு நம்பி இருந்தப்ப, அதிமுக ஓட போய் கூட்டணி வச்சி பொய் மணியாய்டாரு. அந்த மாதிரி ஆளுங்களாலம் நம்ப முடியாது.இன்ணைக்கு ஒன்னு நாளைக்கு ஒன்னு பேசி நம்பள ஏமாத்திட்டு போயிடுவாங்க என்றார்.
இது போன்ற எண்ணற்ற மனிதர்களின் புலம்பல்கள் என்று தான் இந்த அரசியல்வாதிகளின், ஆடசியாளர்களின் காதுகளில் விழுமோ
Comments
Post a Comment