நம்பாதிங்க இது ஒரு மசாலா படம் இல்ல. நந்தா கோபால குமரன்
N G K,N G K ,N G K நீ கொஞ்சம் கமர்ஷியல் பாணியிலே ட்ரைலர ரிலீஸ் பண்ண நாங்க நம்பிடுவோம் னு நினச்சியா
இளம் ஜெனரேஷனுக்கு மசாலா படம் கொடுத்து அவர்களிடம் இருந்து பணம் பிடுங்குபவர் இல்ல இந்த செல்வராகவன்.ஒரு படத்தோட ட்ரைலெரோ,டீசரோ அதன் வெற்றியை நிர்ணயித்து விடுவதில்லை அப்படி ஒரு எண்ணம் இருந்தால் ரசனை இல்லாத ஆடியின்ஸ் தயவு செய்து செல்வராகவன் படத்தை பார்க்க வராதீர்கள் அதே போல் ஆஹா ஓஹோ னு பத்து வருஷம் கழிச்சு பொலம்பதீங்க.கமர்ஷியல் பட பாணியில் N G K ட்ரைலர் இருக்கிறது அது உண்மை தான்.அது தயாரிப்பாளர் அல்லது எடிட்டரின் வேலை ஆகா இருக்கலாம் ரசிகர்களை வசியப்படுத்துவதற்கு. அதைத் தாண்டி ஒரு ஆயுத எழுத்து,இருவர்,போன்ற படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் இதில் எதோ ஒரு கன்டென்ட் இருக்கிறது என்று. இந்த படம் அரசியல் களத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முதல் மூணு ஃபரேம்களிலே காட்டி விடுகிறது.பின்பு மெல்ல மெல்ல விவசாயம்,பாமர மக்களின் பிரச்சனை என்று ஃபரேம், ஃபரேம்களில் மாறுகிறது இந்த நந்தா கோபால குமரன் இரண்டு சண்டை கட்சிகள்,வசனங்களை வைத்து ஒரு படம் கமர்ஷியல் என்று முடிவு செய்து விட முடியாது.அப்படி தான் சிலரை நம்ப வைப்பார்கள். இந்த நாட்டுல ஓவொன்னும் ஒரு விதமான பைத்தியம் நாங்க செல்வராகவன் மேல பைத்தியம். உண்மையான செல்வராகவன் விசிறிகளே நம்ம ஆட்சி வரும் வரையில் காத்திருப்போம்......
Comments
Post a Comment