கஜா புயல் நிவாரணத்திற்கு குரல் கொடுத்த அமிதாப்பச்சன்


- சுப்ரமணி.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இந்திய மக்கள் அனைவரையும் கஜா புயல் நிவாரணத்திற்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 15ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 3.7 லட்சம் மக்கள் வீடுகளின்றி தவிக்கின்றனர். அங்கிருக்கும் 60% - 70% தென்னை மரங்கள் அழிந்து விட்டன. இது இந்தியாவின் தென்னை உற்பத்தியின் நான்கில் ஒரு பங்காகும். அங்குள்ள விவசாயம் முடங்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள் நிவாரணத்திற்கு உதவினாலும், இன்னும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவி தேவை. ஒரே தேசம் ஒரே மக்கள் என்பதை முக்கியமாக கருதி, இந்தியாவின் ஒற்றுமையையும், செழிப்பையும் காத்திட நாம் ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம். மனித நேயத்தின் வழிகாட்டுதலாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வோம். எமது நண்பன் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பின் மூலம் சேவைபுரிந்து வருகிறார். நீங்களும் அவர்களுக்கு ஒருதுணையாக இருங்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருப்பதை கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Comments