விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கமல் வலியுறுத்தல்



புயல் பாதித்த மாவட்டங்களின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியது:

"புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளில் அரசியல் செய்யாமல், எதிர்கட்சிகளின் குரலை மக்கள் குரலாகவே அரசு பார்க்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்ய போவதாக துணை முதல்வர் சொல்லியிருப்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Comments