எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


- சுப்ரமணி.

சஞ்சாரம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, இலக்கிய உலகின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில், 25 ஆண்டுகளாக முழுநேர எழுத்தாளராக இருக்கும் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாதஸ்வர கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி ‘சஞ்சாரம்’ நாவலை எழுதினேன்; சஞ்சாரம் நாவலை எழுதி முடிக்க ஒன்றரை ஆண்டுகாலம் தேவைப்பட்டது. விருது மூலம் கிடைக்கவுள்ள ஒரு லட்சம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்குவேன் என்று கூறினார்.

ஆனந்த விகடன் வார இதழில், இவர் எழுதிய ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘கேள்விக்குறி’ ஆகிய தொடர்கள் குறிப்பிடத்தக்கது. 

Comments