நச்சினார்க்கினியன்.ம
‘மீடூ’ புகாருக்குப்பின் பாடல்-டப்பிங் வாய்ப்புகளை இழந்ததாக பாடகி சின்மயி தெரிவித்ததற்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் ‘பெண்ணியவாதிகள் எங்கே?’ என்று கேட்டிருக்கிறார்.
‘மீடூ’ புகாருக்கு பின் பாடல்-டப்பிங் வாய்ப்புகளை இழந்தேன் என்று பாடகி சின்மயி தெரிவித்தை பிரபல நாளிதழ் வெளியிட்டது. அந்தச் செய்தியை தனது சுட்டுரையில் மேற்கோள்காட்டி பா.ஜ.க வின் தமிழக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக பெண்ணியவாதிகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை தனது விமர்சனமாக பதிவு செய்துள்ளார்.
கடந்த மாதங்களில் தமிழகத்தை கவிஞர் வைரமுத்துவின் மீதான பாடகி சின்மையியின் பாலியல் வன்புணர்வு சார்ந்த குற்றச்சாட்டு அதைத் தொடர்ந்து திரைத்துறையில் பல்வேறு நபர்களின் மீதான பாலியல் வன்புணர்வு சார்ந்த குற்றச்சாட்டுகள் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு பின்னர் தமிழக பா.ஜ.க. ‘மீடூ’ புகாருக்கு ஆதரவாக வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தது. பா.ஜ.க தமிழகத்தில் ‘மீடூ’ வை ஆதரித்தாலும் வேறு மாநிலங்களில் அதற்கு எதிரான நிலை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment