தனுஷ் உடன் இணையும் இயக்குநர் மாரி செல்வராஜ்!



'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.

இது தொடர்பான தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் தனுஷ், "கடைசியாக 'பரியேறும் பெருமாள்' படத்தை பார்த்து விட்டேன். தத்ருபமான வாழ்கை பாணி. காட்சிப்படுத்தப்பட்ட விதம் நம்மை கதையின் களத்தில் இருப்பதை போல் உணர்த்துகிறது. மொத்த படகுழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். எனது அடுத்த படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குவார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'மாரி 2' ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments