பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு பாராட்டு கேன்சல் "மு க ஸ்டாலின் "
Afroz khan
நவ 17 கஜா புயலின் போது பேரிடர் மேலாண்மை மேற்கொண்ட முன்னேற்பாடுகள் பாராட்டிற்குறியது என்று நேற்று ட்வீட் செய்த ஸ்டாலின். இன்று விமர்சித்து மீட்பு பணிகள் படுமோசம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் :
நேற்று @tnsdma -இன் # Cyclone Gaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன் ! ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்பு பணிகள் படு மோசமகா இருக்கிறது . குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை!
இதனை பார்வையிட தமிழக
முதல்வருக்கு தயக்கம் ஏன் ?
கஜா புயல் கடலூர்,நாகப்பட்டினம் ,ராமநாதபுரம் தஞ்சாவூர் பகுதிகளை கோர தாண்டவம் ஆடியது இதில் பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதுவரையில் 27 பேர் கஜாவால் பலியாகி உள்ளனா் . இதை தொடர்ந்து அரசு மீட்புப்பணிகளை முழுவீச்சில் முடக்கிவிடப்பட்டது இருப்பினும் புயல் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய நாகப்பட்டினம் ,திருவாரூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பல குக் கிராமங்களுக்கு மீட்பு குழு செல்லவில்லை என்கிறார் ஸ்டாலின் மேலும் இதனை பார்வையிட முதல்வருக்கு தயக்கம் ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார் . இந்நிலையில் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிடுகிறது சற்று முன் கிடைத்த தகவல் ....
Comments
Post a Comment