- சுப்ரமணி.
தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலால் தமிழக டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதங்களை சந்தித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மக்கள் கரம் கோர்க்க வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில், தமிழில் பதிவிட்ட அவர், "ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது. கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம். முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே." என்றார். இத்துடன் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தமிழக அரசின் அவசர உதவி எங்களையும் பகிர்ந்துள்ளார்.
Comments
Post a Comment