பட்டாசு தொழிலாளர்களுக்காக பேச்சுவார்த்தை: ஸ்டாலின் வலியுறுத்தல்



பல லட்சம் பட்டாசுத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுக்க, உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பட்டாசு வெடிக்கத் தடை; உற்பத்தி செய்வதில் கட்டுப்பாடு என பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்ததன் விளைவு, 1100 தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுக்க, உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் தனது பதிவில் கோரியுள்ளார்.

முன்னதாக, பட்டாசு வெடிப்பதின் முலம் ஏற்படும் காற்று மாசுவின் பிரச்சனைகளை குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலர்கள் தொடுத்த வழக்கின் தீா்ப்பாக பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் நேர கெடுபிடிகளை விதித்தது. இதனால் பட்டாசு வணிகம் முற்றிலுமாக பின்னடைவை சந்தித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சிவகாசியில் 1100 பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால், அங்கு பணிபுரியும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Post a Comment