- ம.நச்சினார்க்கினியன்
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக பொதுமக்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் 13,32, 67,288ரூபாய் இதுவரை பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 15ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. இதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயலின் நிவாரணத்திற்கு பொதுமக்கள் நிதி அளிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் பலர் நிதி உதவி அளித்துள்ளனர். திரைப்பட நடிகர் அஜித் குமார் 15 லட்சம், நடிகர் விவேக் 5 லட்சம், தி.மு.க. சார்பாக துரைமுருகன் 1 கோடி, சக்தி மசாலா துரைசாமி 1 கோடி, லைக்கா நிறுவனம் 1 கோடியே 1 லட்சம் , டி.வி.எஸ். குழுமம் 2 கோடி என பலர் நிவாரண நிதி அளித்துள்ளனர். இதுவரை 13 கோடியே 32லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment