ஜனநாயக உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைது செய்ததை கண்டித்து ஜனநாயக உரிமை பாதுகாப்புக் குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு




பழி வாங்கும் நோக்கில் ஜனநாயக உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கொலைச் சதி வழக்கில் கைது செய்ததை கண்டித்து  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  வெள்ளிக்கிழமை (30.08.18) மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜனநாயக உரிமை பாதுகாப்புக் குழுவினரால் நடத்தப்பட்டது.

கடந்த 28.08.18 காலை மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை ஐந்து மாநிலங்களில் ஒரே நேரத்தில் ஜனநாயக உரிமைக்காக போராடும் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், அருண் பெரேய்ரா, எழுத்தாளர் வெர்னான் கொன்சால்வஸ் ,கவுதம் நவ்லாகா கவிஞர் வரவரராவ், ஆகியோரது  வீட்டை சோதனை செய்ததோடு கைதும் செய்தது.

அ.மார்க்ஸ்:

அரசின் மீதான நம்பிக்கையிழப்பு தான் போராட்டத்திற்கான காரணம். அப்படி போராடுபவர்களின் நியாயத்தை பார்க்காமல் அவர்களை "நகர்புற நக்சல்கள்"என்று சொல்வது அரசின் பலவீனமே.
கடந்த ஜுன் மாதமும் இதே போன்று ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.இதோடு மொத்தம் பத்து நபர்கள் கைதாகியியுள்ளனர். இந்த கைதுகள் அனைத்தும் பிமா கோரேகான் நிகழ்வை மையப்படுத்தியே நிகழ்ந்துள்ளது. பிரிட்டிஷ் ராணுவத்தில் படை வீரர்களாக இருந்த தலித்துகள் பிராமணிய பேஷ்வாக்களுக்கு எதிராக சண்டையிட்டு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதத்தில் கடந்த ஜனவரியில் இந்த வருடம்  200வது ஆண்டு நினைவு தினம் என்பதால் இந்த நிகழ்வு பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நிகழ்வின் இறுதியில் ஏற்பட்ட கலவரத்தை தூண்டியவர்கள் என்று  இவர்கள் கைது செய்யட்டிருக்கிறார்கள்.
ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட பட்டேல் கமிஷனே இதில் முக்கியமான குற்றவாளிகள் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் என்று சொல்லியும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.அதனால் இந்த கைதுகள் தலித்,இஸ்லாமிய,பழங்குடி மக்களின் போராட்டங்களையும் அவர்களுக்காக போராடுபவர்களை பலவவீனப்படுத்தும் விதமாக உள்ளது.உமர் காலித் போன்றவர்களின் மீதான தாக்குதலும் இதற்கு உதாரணம்.இந்த ஒற்றுமை இந்துத்துவ சக்திகளுக்கு பெறும் சவாலாக உள்ளதால் இது போன்ற உள்நோக்கம் கொண்ட கைதுகள் நடக்கிறது.

வழக்கறிஞர் சங்கரசுப்பு:

இந்த கைதுகள் உள்நோக்கம் கொண்டது. முன்னாள் நிதிபதி பாசு அவர்கள் கூறிய கைது செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை"It's legally a illegal arrest".
தலித் மக்களின் கிளர்ச்சி மோடிக்கு  அரசியல் ரீதியாக சவாலானது .அதனால் தான் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை பலவினப்படுத்தும் வகையில் சட்டமியற்ற முயற்சிகள் நடக்கிறது.மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதால்தான் ஏதாவது ஒரு பரபரப்பான சூழலை எற்படுத்தி அதன் மூலம் அதாயம் தேடுகிறார் அதன் விளைவே இந்த கைதுகள்.UAPA போன்ற கடுமையான சட்டங்கள் செயல்பாட்டாளர்கள் மீது பாய்வது ஜனநாயகத்திற்கே எதிரானது அது கண்டிக்கதக்கது. இன்று இந்தியா மினி எமர்ஜென்சி சூழலில் உள்ளது .

பேராசிரியர் லக்ஷ்மனண்:

மோடியின் பாசிச,ஹிந்துத்துவ அரசு தனது கோர முகத்தை எல்லா இடங்களிலும் காட்டிவருகிறது.ஆனந்த் தெல்தும்பே,சத்திய நாராயணன், வரவரராவ் அவர்களின் வீடுகளில் காவல்துறை அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பெயரில் அராஜகம் நிகழ்த்தியுள்ளது.இவர்கள் அனைவரும் ஜனநாயக ரீதியாக தங்களது கருத்தை செல்பவர்கள், அவர்கள் செயல் அரசியல் சாசனப்படி சரியானவை.
எனது நண்பர் சத்திய நாராயணன் வீட்டிற்கு சென்ற காவல்துறை ,அவர் மனைவியிடம்
ஏன் மார்க்சின் புத்தகங்களை வைத்திருக்கிறிர்கள்?
ஏன் ஒரு கடவுள் படம் கூட உங்கள் வீட்டில் இல்லை?
நீங்கள் ஏன் நெற்றியில் பொட்டு வைக்கவில்லை?
ஏன் தாலி அணியவில்லை ? என்று தங்களுக்கு சம்மந்தம் இல்லாத கேள்விகளை கேட்டு அவர் வைத்திருந்த பல புத்தகங்கள் ,ஆவணங்கள் என அனைத்தையும் எடுத்து சென்று விட்டனர். இந்த பாசிச மோடி அரசாங்கம் அனைத்து துறைகளிலும் பெறும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதை மறைப்பதற்கே, போராடுபவர்களை நக்சல்கள் என்று கூறி தனது பலவீனத்தை மறைத்து கொள்கிறது. காந்திய சிந்தனையாளர் மீர்சா இப்படி சொல்வார்:இந்த நீயோ லிபரல் காலத்தின் தவிர்க்க முடியாத இரண்டு விஷயங்களில், ஒன்று தற்கொலை இரண்டு ஆயதம் தாங்கிய போராட்டம்.இவை தான் இன்று நாட்டின் எதிர்த்த உண்மைகள்.

பேராசிரியர் சிவகுமார் :

நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு சொல்வதெல்லாம் போராடுபவர்கள் மீது UAPA போன்ற சட்டங்களை பாய்ச்சினால் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள்,பேராசிரியத்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து மிக பெரும் போராட்டங்களை எடுக்க நேரிடும்.
தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் வேதாந்தாவிற்க்கு எதிரான போராட்டத்தை ஒப்பிட்டு பார்த்தால்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு கம்மபலம் விரித்து வரவேற்கிறார்கள், அதை எதிர்க்கும் மக்களை அந்த அரசாங்கமே ஒடுக்குகிறது.
நீர்,நிலம் அனைத்தும் வியாபாரமாகிவிட்டது இனி ஆக்சிசன் விற்க்கப்பட்டாலும் ஆச்சிர்யம்யில்லை.கனிமவலம் நிறைந்த மலைகள் சுரண்டப்படுகிறது ,அதை எதிர்த்து பழங்குடி மக்களுடன் இணைந்து போராடும் செயல்பாட்டாளர்களையும்,தலித்,இஸ்லாமிய மக்களுக்காக இயங்குபவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் கண்டிக்கதக்கது.

 ஜனநாயக உரிமை பாதுகாப்புக் குழுவினர் முன்வைத்த கோரிக்கைகள்:

1.ஆள்தூக்கிச் சட்டமான UAPA சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்து.

2.தேச நலன்,தேச பாதுகாப்பு, தேச வளர்ச்சி என்ற பெயரில் கருத்துரிமையைப் பறிக்காதே.

3.ஜனநாயக உரிமைகள்,சமத்துவம் ஆகியவற்றை வற்புறுத்தி அரசின் வளர்ச்சி கொள்கைகளையும்,சாதி மதங்களின் பெயரால் மக்களை பிரிப்பதையும் விமர்சிப்பவர்களை" நகர்புற நக்சலைட்டுகள்" என பெயர் சூட்டி வேட்டை ஆடாதே.


- பியர்சன்.

Comments